- நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க.
- நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது.
இந்தியாவை பொறுத்தவரைக்கும் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் இதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ரொம்பவே அவதிப்பட்டு வர்றாங்க. அப்படிப்பட்டவங்க தினமும் காலையில வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே போதும், நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
அதுசரி, நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க. பொதுவா அரிநெல்லின்னு சொல்லக்கூடிய சின்ன நெல்லிக்காயை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துறது இல்லை. ஆனாலும் ஒரு கேள்வி கேட்டு வைப்பாங்க... நம்ம மக்கள். நெல்லிக்காய்... நாட்டு நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் அளவு பெரிதாக இருக்குமே அந்த நெல்லிக்காய்தான் நான் சொல்லக்கூடியது.
வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியலைனா நெல்லிக்காயோட இஞ்சி சேர்த்து அரைச்சி அதோட எலுமிச்சை சாறு சேர்த்து சர்க்கரை, தேவைப்பட்டா உப்பும் சேர்த்து தண்ணி கலந்து சாப்பிடலாம். காலையில் டீக்கு பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.
நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது. கல்லீரல், கணையத்தை பாதுகாக்கும். அந்த வகையில கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரி செய்யும் நெல்லிக்காய். ஏன்... ரகசியமா வரக்கூடிய எய்ட்ஸ் நோயைக்கூட நெல்லிக்காய் குணப்படுத்தும்னு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா நாம சாப்பிடுற முறையிலதான் நோய் குணமாகும்.
-மரியா பெல்சின்