செய்திகள்

ரகுராம் ராஜன் போன்ற ஒருவரைப் பெற தற்போதைய அரசுக்கு தகுதி இல்லை: ப.சிதம்பரம்

Published On 2016-05-28 15:25 GMT   |   Update On 2016-05-28 15:25 GMT
ரகுராம் ராஜன் போன்ற திறமையான ஒருவர் மோடி அரசுக்கு தேவையில்லை என்று ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி:

மோடி அரசின் இரண்டு ஆண்டு கால ஆட்சிப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீதான சுப்பிரமணிய சாமி எம்.பி.யின் விமர்சனம் பற்றி கேள்வி எழுப்பபட்டது.

இதற்கு பதில் அளித்த ப.சிதம்பரம் “ரகுராம் ராஜன் போன்ற ஒருவரைப் பெற தற்போதைய அரசு தகுதியுடையதுதானா என்று நான் சிந்திக்க தொடங்கிவிட்டேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் சிறப்பானவரை ஆர்.பி.ஐ. தலைமை பொறுப்பிற்கு நியமித்துள்ளது. இப்போதும் கூட நாங்கள் அவரை உலகின் தலைசிறந்தவர் என்று நம்புகிறோம்.

உலகம் முழுவதும் நிதி மந்திரியும் ரிசர்வ் வங்கி ஆளுநரும் கலந்தாலோசனையில் ஈடுபடுவது வழக்கம்தான். இதனால், நிதி மந்திரி ரிசர்வ் வங்கி ஆளுநரின் திறமை குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று பொருளல்ல. இருவருமே வெவ்வேறு பார்வையிலிருந்து பொருளாதாரத்தை அணுகுபவர்கள். அரசின் கண்ணோட்டத்தில் வளர்ச்சியும், மத்திய வங்கியின் கண்ணோட்டத்தில் நிதிநிலைமை உறுதிப்பாடும் முக்கித்துவம் பெறும்” என்று அவர் தெரிவித்தார்.

Similar News