செய்திகள்

ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா ராணுவ முகாம் அருகே பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்

Published On 2016-10-03 00:21 IST   |   Update On 2016-10-03 00:21:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டனர். ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் 46ஆர்.ஆர் ராணுவ முகாம் அருகே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டனர்.
 
ராணுவ முகாம் அருகே உள்ள பொது மக்கள் கூட்ம் பூங்காவில் நுழைய முயன்றனர். ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் பாகிஸ்தான் 6-வது முறையாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

நேற்று இரவு 10.30 மணியவில் இந்த தாக்குதல் தொடங்கியது. இந்திய ராணுவம் தரப்பில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

Similar News