செய்திகள்
ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் 8 போர் விமானங்களை தரையிறக்கியது விமானப்படை
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் 8 போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டது.
ஆக்ரா:
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரோ-லக்னோ இடையே 302 கி.மீ. தொலைவுக்கு ரூ.13200 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் கனவுத்திட்டமான இத்திட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த எக்ஸ்பிரஸ் சாலையானது இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்தியாவின் நீண்ட எக்ஸ்பிரஸ் சாலையான இந்த சாலையை உ.பி. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் திறந்துவைத்தார்.
அப்போது அந்த சாலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 8 போர் விமானங்களை தரையிறக்கி சோதனை செய்தனர். போர் போன்ற அவசரகாலங்களில் போர் விமானங்களை இயக்குவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுடன், ராம் கோபால் யாதவ், ஷிவபால் யாதவ், தர்மேந்திர யாதவ், முன்னாள் ஆளுநர் அஜீஸ் குரேஷி, ஆசம் கான் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு மே மாதம் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையிலும் இதேபோன்று இந்திய விமானப்படை போர் விமானத்தை தரையிறக்கி சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.