செய்திகள்

வங்கி கடனை செலுத்தாததால் ஆந்திர மந்திரி சொத்துக்கள் ஜப்தி

Published On 2016-12-30 07:30 GMT   |   Update On 2016-12-30 07:30 GMT
ஆந்திராவில் வங்கி கடனை செலுத்தாததால் கல்வி மந்திரி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நகரி:

ஆந்திர மாநில கல்வி மந்திரியாக இருப்பவர் கண்டா சீனிவாசராவ். இவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து 2005-ம் ஆண்டு பிரதிக்ஷா என்ற கம்பெனியை தொடங்கினார். இந்த கம்பெனி சார்பில் இந்தியன் வங்கியில் ரூ.240 கோடி கடன் வாங்கப்பட்டது. முதலில் கடன் தொகையை கட்டி வந்தனர். அதன்பின் கட்டாததால் வங்கி நோட்டீஸ் அனுப்பியது.

ரூ.196.51 கோடி பாக்கி தொகை இருந்ததால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும் பிரதிக்ஷா கம்பெனி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து வங்கி ஜப்தி நடவடிக்கையில் இறங்கியது.

கடனுக்கு மந்திரி கண்டா சீனிவாசராவ் ஜாமீனாக கொடுத்திருந்த வீடு, அலுவலகம் போன்ற சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News