செய்திகள்
115 மாவட்டங்களில் மோடி சுற்றுப் பயணம்: ஏப்ரல் 14-ந்தேதி தொடங்குகிறார்
இந்தியாவில் பின்தங்கியுள்ள 115 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் 14-ந்தேதி அம்பேத்கார் பிறந்த தினத்தன்று சுற்றுப்பயணம் தொடங்குகிறது. #Modi
புதுடெல்லி:
இந்தியா முழுவதும் பின் தங்கியுள்ள மாவட்டங்கள் எத்தனை உள்ளன என்று சமீபத்தில் மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்தியது.
அப்போது 115 மாவட்டங்கள் பின் தங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்தது. அந்த மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது.
அந்த 115 மாவட்டங்களை மேம்படுத்துவதற்கான திட்டப்பணிகளை அமல்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சுகாதாரம், குடிநீர், கல்வி போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்த மோடி கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அந்த 115 மாவட்டங்களிலும் தொழில் விவசாயம் சார்ந்த பணிகளை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவர மோடி உத்தரவிட்டுள்ளார். இது தவிர நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த 115 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் 14-ந்தேதி அம்பேத்கார் பிறந்த தினத்தன்று மோடியின் சுற்றுப் பயணம் தொடங்குகிறது.
சுமார் 3 மாதங்கள் அவர் 115 மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார். டெல்லியில் நேற்று நடந்த அம்பேத்கார் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு மோடி பேசும் போது இந்த தகவலை வெளியிட்டார். #TamilNews