செய்திகள்

சத்தீஸ்கரில் ஆயுதங்களுடன் 62 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்

Published On 2018-11-06 17:45 IST   |   Update On 2018-11-06 17:45:00 IST
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு படையினரால் தேடப்பட்டு வந்தவர்களில் 62 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களுடன் போலீசாரிடம் சரணடைந்தனர். #62Naxals #Naxalssurrender #NaxalsChhattisgarh
புவனேஸ்வர்:

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை வேட்டையாட தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

அவ்வகையில், சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்தலை சீர்குலைப்பதற்காகவும், வன்முறை தாக்குதல்களை நடத்துவதற்காவும் நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளதால் அவர்களை வேட்டையாட மாநிலம் முழுவதும் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கு முதல்கட்ட தேர்தலை சந்திக்கவுள்ள பஸ்ட்டார், நாராயணப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 62 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரணாகதி அடைந்தனர்.

இந்த நடவடிக்கைக்காக சத்தீகர் மாநில முதல் மந்திரி ரமண் சிங் மற்றும் காவல்துறை டி.ஜி.பி. ஆகியோருக்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். #62Naxals #Naxalssurrender #NaxalsChhattisgarh
Tags:    

Similar News