செய்திகள்

தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க கோரி மனு- அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Published On 2019-04-04 12:38 IST   |   Update On 2019-04-04 12:38:00 IST
தமிழகத்தில் ஏப்.18-ம் தேதி தேர்தல் நடத்தாமல், வேறு தேதியில் நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. #LokSabhaElections2019 #SC
புதுடெல்லி:

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலை ஒத்தி வைக்க கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

‘பெரிய வியாழன்’ வருவதால் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல் 23-ந்தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.



தேர்தலை தள்ளிவைக்க கோரும் இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.

எப்படி பிரார்த்தனை செய்வது? எப்படி ஓட்டளிப்பது? என்பது பற்றி நாங்கள் அறிவுரை செய்ய விரும்பவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

தமிழகத்தில் தேர்தலை ஒத்திவைக்க கோரும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. இந்த மனு மீது 8-ந்தேதி விசாரணை நடக்கிறது. #LokSabhaElections2019 #SC

Similar News