செய்திகள்
கோவிடோல்

கொரோனா வைரஸ் பாதிப்பை சரிசெய்யும் தன்சானியா மூலிகை - ஆறுதல் அளிக்கும் வைரல் பதிவு

Published On 2020-06-18 03:51 GMT   |   Update On 2020-06-18 04:26 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பை சரிசெய்யும் தன்மை தன்சானியா நாட்டில் கிடைக்கும் மூலிகை மருந்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.



உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சரியான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை உலகம் முழுக்க சுமார் 80 லட்சம் பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளில் கோவிடோல் எனும் மூலிகை மருந்து கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் தன்மை கொண்டுள்ளது என தன்சானியா நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



வைரல் தகவலுடன் தன்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி மற்றும் சுகாதார துறை மந்திரி மற்றும் கோவிடோல் மருந்தின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. வைரல் தகவல்களின் உண்மை தன்மை பற்றி ஆய்வு செய்ததில், அவற்றில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

உண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் மருந்து எதற்கும் தன்சானியா அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. கோவிடோல் மருந்து எவ்வித ஆய்விற்கும் ஈடுபடுத்தப்படவும் இல்லை, இது நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது என்றும் நிரூபிக்கப்படவில்லை.

அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தன்சானியா மூலிகை மருந்து குணப்படுத்தும் என்ற தகவல் முற்றிலும் பொய் என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Similar News