செய்திகள்
மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்
மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்.
புதுடெல்லி:
மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரியாக பதவி வகித்தவர் ராம் விலாஸ் பஸ்வான்.
மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் இன்று காலமானார்.
சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்தார் என ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.