செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா 2-வது அலையில் 594 டாக்டர்கள் இறந்துள்ளனர் - இந்திய மருத்துவ கழகம் தகவல்

Published On 2021-06-03 00:58 GMT   |   Update On 2021-06-03 00:58 GMT
கடந்த ஆண்டு கொரோனாவால் நாடு முழுவதும் 748 டாக்டர்கள் இறந்தநிலையில், தற்போது 2-வது அலையில் குறுகிய காலத்தில் 594 டாக்டர்கள் இறந்துள்ளனர்
புதுடெல்லி:

தற்போதைய கொரோனா 2-வது அலையில் இத்தொற்றுக்கு உள்ளாகி நாடு முழுவதும் 594 டாக்டர்கள் இறந்துள்ளனர் என இ்ந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 107 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.டெல்லிக்கு அடுத்தபடியாக பீகாரில் 96, உத்தரபிரதேசத்தில் 67, ராஜஸ்தானில் 43, ஜார்கண்டில் 39, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தலா 32 டாக்டர்கள் இறந்துள்ளனர். கொரோனா முதலாவது அலையில் நாடு முழுவதும் 748 டாக்டர்கள் இறந்தனர் என இந்திய மருத்துவ கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கடந்த ஆண்டு கொரோனாவால் நாடு முழுவதும் 748 டாக்டர்கள் இறந்தநிலையில், தற்போது 2-வது அலையில் குறுகிய காலத்தில் நாங்கள் 594 டாக்டர்களை இழந்துள்ளோம்’ என இந்திய மருத்துவ கழக தலைவர் ஜே.ஏ.ஜெயலால் தெரிவித்துள்ளார்.

Similar News