செய்திகள்
கோப்புப்படம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 5 கோடி பேருக்கு பரிசோதனை செய்து சாதனை

Published On 2021-06-03 01:02 GMT   |   Update On 2021-06-03 01:02 GMT
வேறு மாநிலங்களைவிட பரிசோதனை அளவு 5 கோடி பேரை எட்டிய முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்வதாக மாநில சுகாதார தலைமை செயலாளர் கூறி உள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக கொரோனா பரிசோதனை 5 கோடி பேரை எட்டி உள்ளது. அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை 3 லட்சத்து 31 ஆயிரத்து 511 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அன்றைய தினம் 1,500 பேருக்கு தொற்று அறியப்பட்டது. அங்கு 28 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் குணமடைந்து திரும்புபவர்கள் எண்ணிக்கை 97.1 சதவீதமாக உள்ளது. இதுவரை அங்கு 5.32 கோடி பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வேறு மாநிலங்களைவிட பரிசோதனை அளவு 5 கோடி பேரை எட்டிய முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்வதாக மாநில சுகாதார தலைமை செயலாளர் கூறி உள்ளார்.

கொரோனா 3-வது அலை ஏற்படாமல் தடுக்கவும், சிறுவர்கள் கொரோனாவல் பாதிக்கப்படாமல் இருக்கவும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்காக 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு, மாவட்டம் தோறும் 2 சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.இதுவரை உத்தரபிரதேசத்தில் 1 கோடியே 51 லட்சம் பேருக்கு மேல் முதல்கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 2-ம் கட்ட தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News