இந்தியா
ஹோலி பண்டிகையையொட்டி 28 சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
- பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
- மத்திய ரெயில்வே 28 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளதாக அறிவித்து உள்ளது.
மும்பை:
மார்ச் மாதம் 13-ந்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள். இந்தநிலையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மத்திய ரெயில்வே 28 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளதாக அறிவித்து உள்ளது.
இந்த சிறப்பு ரெயில்கள் மும்பையில் இருந்து புனே, நாக்பூர், மட்காவ், நாந்தெட் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் ஏ.சி. மற்றும் முன்பதிவு படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும் என ரெயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.