இந்தியா

'வீடியோ' காலில் கணவன்.. செல்போனை மகா கும்பமேளா நீரில் முக்கி எடுத்த மனைவி - நவீன புனித நீராடல்!

Published On 2025-02-25 17:14 IST   |   Update On 2025-02-25 17:14:00 IST
  • நிறைவடைய உள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட மக்களிடையே ஒரு போட்டி நிலவுகிறது.
  • போனை தண்ணீரில் நனைத்து நனைத்து எடுத்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நாளையுடன் இந்நிகழ்வு நிறைவடைய உள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட மக்களிடையே  போட்டி நிலவுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், ஏதோ ஒரு காரணத்தால் சங்கமத்திற்குச் சென்று குளிக்க முடியாதவர்கள், அங்கிருந்து கொண்டு வரும் தண்ணீரைத் தெளித்து அல்லது வீட்டில் உள்ள தண்ணீரில் கலந்து குளிப்பதன் மூலம் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் கும்பமேளாவில் புனித நீராட பிரயாக்ராஜ் சென்ற இடத்தில் தன் கணவருக்கு வீடியோ-கால் செய்து, போனை தண்ணீரில் நனைத்து நனைத்து எடுத்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

கணவனால் கும்பமேளாவிற்கு வரமுடியாத காரணத்தால், அப்பெண் இவ்வாறு செய்ததாக தெரிகிறது.

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே வைரலானது. இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். கமன்ட் செக்ஷனில் பலர் பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News