இந்தியா

இஸ்ரேல் போர்: டெல் அவிவ்-க்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து

Published On 2023-10-07 15:54 GMT   |   Update On 2023-10-07 15:54 GMT
  • இஸ்ரேல் மற்றும் ஹமஸ் அமைப்பு இடையே பயங்கர மோதல்.
  • ஹமஸ் படையினர் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்.

டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்-க்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தி வரும் தாக்குதலால் விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

வழக்கமாக திங்கள் கிழமை, செவ்வாய் கிழமை, வியாழன் கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை என வாரத்திற்கு ஐந்து முறை இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் இருந்து டெல் அவிவ்-க்கு செல்லும் ஏர் இந்தியாவின் ஏ.ஐ. 139 விமானமும், டெல் அவிவ்-இல் இருந்து டெல்லி வரும் ஏ.ஐ. 140 விமானமும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் நலன் கருதி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்று விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

காசா எல்லை பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹமஸ், இன்று இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலால் இஸ்ரேலில் போர் துவங்கி இருக்கிறது. போர் காரணமாக நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News