குஜராத் டு தாய்லாந்து: 4 மணி நேர பயணத்தில் 15 லிட்டர் மதுவை குடித்துத் தீர்த்த ஏர் இந்தியா பயணிகள்
- முதல் விமானத்திலேயே 98 சதவீத இருக்கைகள் நிறைந்து காணப்பட்டது.
- 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்துள்ளது.
டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்தியாவின் பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்து தாலாய்ந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புதிதாகவிமான சேவையை தொடங்கியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமானமானது சூரத்தில் இருந்து புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்து பாங்காக் சென்றுள்ளது. இந்த விமானத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் அனைத்தையும் பயணிகக்ள் 4 மணி நேரத்தில் குடித்துத் தீர்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் விமானத்திலேயே 98 சதவீத இருக்கைகள் நிறைந்து காணப்பட்டது. அதாவது, 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்துள்ளது. விமானத்தில் மதுபானம் தீர்ந்துவிட்டது என்று பயணிகள் கூறும் வீடியோக்கள் வெளிவந்தன.
1.8 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள 15 லிட்டர் பிரீமியம் மதுபான வகைகள் அந்த விமானத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
விமானத்தில் ஒரு பயணிக்கு 100 மில்லிக்கு மேல் மதுபானம் வழங்கப்படுவதில்லை என்ற விமான ஊழியர்கள் தெரிவிக்கும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.