இந்தியா

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்: பாப்கார்னுக்கு வரி போடும் நாட்டில்.. ஸ்டார்ட் அப் நிறுவனர் ஆதங்கம்

Published On 2024-12-23 11:38 GMT   |   Update On 2024-12-23 12:46 GMT
  • நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன.
  • அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்

 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனர் ஒருவரின் ரெட்டிட் சமூக வலைதள பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்தியாவில் தொழில்முனைவோருக்கு இருக்கும் சவால்கள் மற்றும் வளர்ச்சிக்கான தடைகளை மேற்கோள் காட்டி அதிக சம்பளம் வாங்கும் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோரை இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத இந்த நிறுவனர் u/anonymous_batm_an என்ற ப்ரொபைலில் இந்த பதிவை இட்டுள்ளார். அதில், தான் புகழ்பெற்ற இந்திய பொறியியல் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றதாகவும், பின்னர் அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

 

2018 இல் இந்தியாவுக்குத் திரும்பி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சராசரியாக ரூ. 15 லட்சம் சம்பளத்தில் கிட்டத்தட்ட 30 பேர் பணிபுரியும் அவரது ஸ்டார்ட்அப் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

ஆனால் நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன. எதையும் செய்ய அதிகாரம், அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்களுடன் தொடர்பு தேவை என்று தனது தற்போதைய பதிவில் ஆதங்கப்பட்டுள்ளார்.

அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகள் குறித்த புகார்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்தியாவின் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வை விமர்சித்துள்ள அவர், மக்கள் சமூக நிலையை செல்வம் மற்றும் தோற்றத்துடன் இணைத்து அதன் அடிப்படையிலேயே ஒருவருக்கு மதிப்பளிக்கும் போக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரமான பொருளாதாரச் சரிவு மற்றும் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்று கணித்துள்ள இந்த நிறுவனர் இந்தியாவுக்கு மாற்றாக தொழில்முனைவோர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல பரிந்துரைத்துள்ளார்.

சுருக்கமாக சொன்னால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் எண்ணம் இல்லாததால், ஆட்சியாளர்கள் உங்கள் பாப்கார்னுக்கு வரி விதிக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்! என்று புலம்பித் தீர்த்துள்ளார்.

 

கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கான வரியை 5 முதல்18 சதவீதம் வரை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News