இந்தியா
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார்
- அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து பேசுகிறார்.
- அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர அதிகாரிகள் மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் பயணமாக நாளை அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பிறகு, முதன்முறையாக உயர்மட்ட பயணம் மேற்கொள்கிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தை, பிராந்தியம் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.
அத்துடன் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மாநாடு இவரது தலைமையில் நடைபெற இருக்கிறது.
டெல்லி மற்றும் வெளியேற இருக்கும் ஜோ பைடன் நிர்வாகத்துடன் நடைபெறும் கடைசி பேச்சுவார்த்தை இதுவாக இருக்கும்.
டொனால்டு டிரம்ப் நியமித்துள்ள வெளியுறவுத்துறை மந்திரியை சந்திப்பாரா என்பது தெரியவில்லை.