இந்தியா
காசா நிலைமை குறித்து கவலை கொண்டுள்ளோம்: இந்திய வெளியுறவுத்துறை
- இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படுவது முக்கியம் என தெரிவித்தது.
புதுடெல்லி:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிவடைந்த நிலையில், காசா மீது நேற்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும், பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்னும் 59 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ளது.
இந்நிலையில், காசா நிலவரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், காசாவின் நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படுவது முக்கியம். காசாவில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.