இந்தியா
திருப்பதிக்கு போகப்போறீங்களா... அப்போ இது கட்டாயம்...
- இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
- பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும் என்று அந்தந்த மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சீனாவில் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குளிர்காலத்தில் பரவக்கூடிய வைரஸ் என்றும் இதன் பாதிப்பு 6 நாட்கள் வரை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும் என்று அந்தந்த மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சொர்க்கவாசல் திறப்புக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் முககவசம் அணிந்து வர அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு வலியுறுத்தி உள்ளார்.