ஆம் ஆத்மி திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ. 25 ஆயிரம் சேமிக்கிறது: கெஜ்ரிவால்
- வாக்காளர்கள் பாஜக-வுக்கு வாக்களித்து உங்களுடைய சேமிப்பை இழக்கும் தவறை செய்ய வேண்டாம்.
- நாங்கள் கணக்கிட்டதன்படி ஒவ்வொரு குடும்பமும் 50,200 ரூபாயை சேமிக்க முடியும்.
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அரசு கொண்டு வந்த திட்டங்களால் மக்கள் நிதி தொடர்பாக அடைந்த பலன்களை அறிந்துகொள்ளும் வகையில் ஆம் ஆத்மி கட்சி "Bachat Patra" பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரசாரத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.
அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
எங்கள் தன்னார்வலர்கள் மக்களிடம் சென்று 'பச்சத் பத்ரா (Bachat Patra)'வை நிரப்பச் சொல்வார்கள், அதில் எங்கள் இலவச நலத்திட்டங்கள் மூலம் அவர்கள் எவ்வளவு சேமிக்கிறார்கள் என்பதைக் கவனிப்பார்கள்.
ஆம் ஆத்மி அரசு கொள்கையின் அடிப்படையில் டெல்லி குடும்பம் மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் சேமிக்கிறது. மீண்டும் ஆம் ஆத்மி அரசை கொண்டு வந்தால், அதன்பின் புதிய திட்டங்கள் மூலம் மேலும் 10 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும்.
மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம், மகிளா சம்மன் யோஜனா, சஞ்ஜீவானி யோஜனா போன்ற திட்டங்கள் ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
மத்திய பட்ஜெட்கள் பொதுவாக குடும்பங்களுக்கு பணவீக்கம் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், டெல்லியில் எங்களுடைய அரசு ஒவ்வொரு குடும்பத்தின் சேமிப்பையும் உறுதி செய்யும். மாறாக, ஆட்சிக்கு வந்தால் ஆம் ஆத்மியின் திட்டங்களை நிறுத்துவிடுவதாக பாஜக தொடர்ந்து கூறி வருகிறது.
பா.ஜ.க. தொழில்அதிபர் நண்பர்களுக்கு பட்ஜெட்டை திருப்பிவிடும் நிலையில், நாங்கள் பட்ஜெட்டை மக்கள் நலனுக்காக பயன்படுத்துகிறோம். தாராவியில், அவர்களுக்கு நெருக்கமானவர்களில் ஒருவருக்கு வழங்கியுள்ளனர்.
நாங்கள் கணக்கிட்டதன்படி ஒவ்வொரு குடும்பமும் 50,200 ரூபாயை சேமிக்க முடியும். வாக்காளர்கள் பாஜக-வுக்கு வாக்களித்து உங்களுடைய சேமிப்பை இழக்கும் தவறை செய்ய வேண்டாம்.
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.