இந்தியா
மெகந்தி வரைந்து விவாகரத்தை கொண்டாடிய இளம்பெண்- வீடியோ
- வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- இணையவாசிகள் பெண்ணுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
திருமணம், பண்டிகை நாட்கள் உள்ளிட்ட வாழ்வின் சந்தோஷமான தருணங்களில் பெண்கள் 'மெகந்தி' வைத்து கொள்கிறார்கள். ஆனால் இளம்பெண் ஒருவர் தன்னுடைய விவாகரத்தை கொண்டாட மெகந்தி வரைந்து கொண்டுள்ளார்.
தன்னுடைய கையில் திருமண உறவில் தான் கடந்து வந்த பாதையை விளக்கும்படி மெகந்தி வரைந்து கொண்டார். அதில் இருமனங்கள் ஒன்றிணைவது, திருமணத்திற்கு பின்பு கணவரின் குடும்பத்தாரால் அடிமையாக நடத்தப்பட்டு நசுக்கப்பட்டது, இதனை தட்டி கேட்காமல் கணவர் தன்னிடமே வாக்குவாதத்தில் ஈடுபடுவது, இதனால் மனம் நொந்து இறுதியாக விவாகரத்தில் தன்னுடைய திருமண வாழ்க்கை முடிவது தொடர்பாக மெகந்தி வரைந்திருந்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பெண்ணுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.