இந்தியா

மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம்.. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

Published On 2024-12-15 14:02 GMT   |   Update On 2024-12-15 14:02 GMT
  • தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  • ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

மாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

இதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவரைத் தொடர்ந்து சிவ சேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

டிசம்பர் 5 ஆம் தேதி தேவேந்திர ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற 10 நாட்களுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது.

பாஜகவின் மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே, ராதாகிருஷ்ண விகே பாட்டீல், ஆஷிஷ் ஷெலர், சந்திரகாந்த் பாட்டீல், கிரீஷ் மகாஜன், கணேஷ் நாயக், மங்கள் பிரதாப் லோதா, ஜெய்குமார் ராவல், பங்கஜா முண்டே, அதுல் சாவே உள்ளிட்டோர் பதவியேற்றனர்.

ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியின் தாதா பூசே, சம்புராஜ் தேசாய், சஞ்சய் ரத்தோட், குலாப்ராவ் பாட்டீல், உதய் சமந்த் ஆகியோர் பதவியேற்றனர்.

அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மாணிக்ராவ் கோகடே, தத்தாத்ரே வித்தோபா பார்னே, ஹசன் முஷ்ரிப், அதிதி சுனில் தட்கரே மற்றும் தனஞ்சய் முண்டே ஆகியோர் பதவியேற்றனர். 

Tags:    

Similar News