டெல்லி சட்டசபை தேர்தல்- 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி
- ஆம் ஆத்மி கட்சி 11 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருந்தது.
- நியூ டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவிப்பு.
டெல்லியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
பா.ஜ.க.வுக்கு எதிராக களத்தில் நிற்கும் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க களமிறங்கி உள்ளது.
இதைதொடர்ந்து, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி கட்சி 11 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருந்தது.
இதைஅடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த யு.பி.எஸ்.சி. ஆசிரியர் அவத் ஓஜாவிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய 3வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது
இதில், நியூ டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.