இந்தியா

'ரத்த ருசி கண்ட காங்கிரஸ்..' மோடியின் பேச்சு 2 கணக்கு பீரியட் ஒன்னா வந்த மாதிரி - பிரியங்கா சலிப்பு

Published On 2024-12-15 02:48 GMT   |   Update On 2024-12-15 02:49 GMT
  • நட்டா கையைத் தடவிக் கொண்டிருந்தார், ஆனால் மோடி ஜி அவரைப் பார்த்தவுடன், கவனமாகக் கேட்பது போல் பாவனை செய்யத் தொடங்கினார்.
  • அமித் ஷாவும் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டார். பியூஷ் கோயல் ஜி தூங்கியே விட்டார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் மக்களவையில் அரசியலமைப்பு மீதான சிறப்புரைகள் இடம்பெற்றன.

அரசியலமைப்பை ஏற்று 75 வருடம் ஆகியுள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் இந்த உரைகள் இடம்பெற்றன. இதில் நேற்று கடைசியாகப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

நேரு தொடங்கி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என வரிசையாக மோடி தனது உரையில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ரத்த ருசி கண்ட காங்கிரஸ் அரசியலமைப்பை மீண்டும் மீண்டும் காயப்படுத்தியுள்ளது என்று அவர் தெரிந்தார்.

இந்நிலையில் கூட்டம் முடிந்து வெளியே வந்த வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, மக்களவையில் மோடி ஆற்றிய 110 நிமிட உரையை பள்ளியின் இரண்டு கணித வகுப்புகளில் தொடர்ந்து இருப்பதுபோன்று சலிப்பூட்டுவதாக இருந்தது என தெரிந்தார் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, பிரதமர் புதியதாக ஒன்றும் பேசவில்லை, அவர் எங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினார். இது என்னை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி எடுத்துச் சென்றது. நான் அந்தக்காலத்தில் [பள்ளியில்] இரண்டு கணித வகுப்புகளில் அமர்ந்திருப்பதைப் போல உணர்ந்தேன்.

நட்டா ஜியும் கையைத் தடவிக் கொண்டிருந்தார், ஆனால் மோடி ஜி அவரைப் பார்த்தவுடன், அவர் கவனமாகக் கேட்பது போல் பாவனை செய்யத் தொடங்கினார்.

அமித் ஷாவும் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டார். பியூஷ் கோயல் ஜி தூங்கியே விட்டார். இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பிரதமர் புதிதாக ஏதாவது சொல்வார் என்று நான் நினைத்தேன் என்று பிரியங்கா தெரிவித்தார். 

Tags:    

Similar News