இந்தியா

திடீரென இரண்டாகப் பிரிந்த சரக்கு ரெயில்: காரணம் இதுதான்

Published On 2024-12-14 22:07 GMT   |   Update On 2024-12-14 22:07 GMT
  • சரக்கு ரெயிலின் பெட்டிகளிடையே உள்ள இணைப்பு திடீரென அறுந்தது.
  • இதனால் ரெயில் இரண்டாகப் பிரிந்து 10 பெட்டிகள் முன்னோக்கிச் சென்றது.

பாட்னா:

பீகார் மாநிலத்தின் பாகல்பூர்-ஜமால்பூர் வழித்தடத்தில் நேற்று 30 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், அந்த சரக்கு ரெயிலின் பெட்டிகள் இடையே உள்ள இணைப்பு திடீரென அறுந்தது. இதனால் ரெயில் இரண்டாகப் பிரிந்து 10 பெட்டிகள் முன்னோக்கிச் சென்றது. 20 பெட்டிகள் தண்டவாளத்தில் நின்றன.

தகவலறிந்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தண்டவாளத்தில் நின்ற பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இன்ஜினுடன் இணைந்திருந்த 10 பெட்டிகள் கல்யாண்பூர் ரெயில் நிலையத்திற்கும், மீதமுள்ள 20 பெட்டிகள் சுல்தான்கஞ்ச் ரெயில் நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் நீண்ட நேரமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

மேலும், அந்தப் பகுதிக்கு அருகிலுள்ள ரெயில்வே கிராசிங்கிலும் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், இந்தச் சம்பவம் காரணமாக பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சீரடைந்துள்ளது என தெரிவித்தனர்.

Tags:    

Similar News