null
கேரளாவில் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து
- தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
- மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் மாவட்ட மருத்துவமனை உள்ளது. இங்கு ஏராளமானோர் உள் நோயாளிகளாக உள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை ஆஸ்பத்திரியின் ஒரு பகுதியில் திடீரென தீ பிடித்தது. நர்சுகள் உடை மாற்றும் அறை மற்றும் மருந்துகள் சேமிக்கும் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தீயின் காரணமாக கரும்புகை அந்த பகுதி முழுவதும் பரவியது. தீ விபத்து நடந்த போது பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களுக்க முதலில் என்ன நடந்தது? என்றே தெரியவில்லை.
இருப்பினும் மருத்துமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, பெண்கள் வார்டுகளில் இருந்த நோயாளிகள், ஐ.சி.யூ.வில் இருந்த நோயாளிகள் என பலரையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.
தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.