இந்தியா
காட்டு யானையை வீடியோ எடுத்து தொந்தரவு செய்த நபருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த வனத்துறை
- பந்திப்பூர் தேசிய பூங்காவில் யானைகள் அதிகம் உள்ளது.
- யானையின் முன் நின்று இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பந்திப்பூர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள்.
இந்நிலையில், பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையின் முன் நின்று இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து, அமைதியாக இருந்த யானையை துன்புறுத்திய நபருக்கு வனத்துறை ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.