இந்தியா
null

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா காலமானார்

Published On 2025-02-01 14:50 IST   |   Update On 2025-02-01 14:51:00 IST
  • அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
  • . தனது பதவிக்காலத்தில் இந்தியாவின் தேர்தல் செயல்முறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் (CEC) நவீன் சாவ்லா இன்று [சனிக்கிழமை] காலமானார். அவருக்கு வயது 79.

சாவ்லாவின் மரணத்தை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி உறுதிப்படுத்தியுள்ளார். மூளை அறுவை சிகிச்சைக்காக சாவ்லா டெல்லி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்காட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு டெல்லி கிரீன் பார்க் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து குரேஷி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், நாட்டின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஸ்ரீ நவீன் சாவ்லாவின் மறைவை அறிந்து வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

நவீன் சாவ்லா, 2005 மற்றும் 2009 க்கு இடையில் தேர்தல் ஆணையராக (EC) பணியாற்றினார், பின்னர் ஏப்ரல் 2009 முதல் ஜூலை 2010 வரை தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றினார். தனது பதவிக்காலத்தில் இந்தியாவின் தேர்தல் செயல்முறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

சாவ்லா பாரபட்சமாக செயல்படுவதாக கூறி அவரை பதவியில் இருந்து நீக்குமாறு அப்போதைய பாஜக எதிர்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்ட 204 எம்.பிக்கள் அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாமிடம் மனு அளித்தனர். மேலும் அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் பாஜக வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News