
பட்ஜெட் 2025-26: பீகாருக்கு ஜாக்பாட், ஆந்திரா புறக்கணிப்பு- ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
- பீகாருக்கு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தாண்டின் இறுதியில் பீகாரில் தேர்தல் நடைபெறுகிறது.
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பீகாரில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பட்ஜெட்டில் பல்வறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இந்தாண்டின் இறுதியில் பீகாரில் தேர்தல் வரவிருப்பதால் பட்ஜெட்டில் அம்மாநிலத்திற்கு பல அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்றொரு தூணான ஆந்திரா ஏன் இந்த பட்ஜெட்டில் இவ்வளவு மோசமாக புறக்கணிக்கப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.