இந்தியா
VIDEO: உத்தரகாண்டில் டிரெக்கிங் மற்றும் பைக் பேரணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- பிரதமர் மோடி, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கை தேவியின் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
- உத்தரகாண்ட் மாநிலத்தின் பொருளாதாரம் பெருமளவில் சுற்றுலாவை சார்ந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை புரிதிந்த்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கை தேவியின் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
பின்னர் உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சிலில் ஜீப் டிரெக்கிங் மற்றும் பைக் பேரணியை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் கலந்து கொண்டார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக இந்த பேரணி நடத்தப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பொருளாதாரம் பெருமளவில் சுற்றுலாவை சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.