இந்தியா
பா.ஜ.க. தனது உத்தரவாதத்தை ஒருபோதும் நிறைவேற்றாது - குஜராத் ஆம் ஆத்மி தலைவர்
- டெல்லி மக்களின் இதயங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார்.
- பா.ஜ.க. தனது உத்தரவாதத்தை ஒருபோதும் நிறைவேற்றாது
டெல்லி மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. மனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் இசுதன் காத்வி கூறுகையில்,
டெல்லி மக்களின் இதயங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். இப்போது குஜராத் மக்களின் இதயங்களிலும் அரவிந்த் ஜி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் டெல்லியில் மக்களுக்காக ஏராளமான பணிகளை செய்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தனது உத்தரவாதத்தை நிறைவேற்றும் தலைவர். பா.ஜ.க. தனது உத்தரவாதத்தை ஒருபோதும் நிறைவேற்றாது என்று தெரிவித்துள்ளார்.