இந்தியா (National)

தெலுங்கானாவில் புதுசு புதுசா யோசிக்கிறாங்க... சோப்பு போட்டு குளிப்பாட்டி ஓட்டு சேகரிப்பு

Published On 2023-11-16 04:02 GMT   |   Update On 2023-11-16 04:02 GMT
  • உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.
  • வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை பின்பற்றி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

ஆலேரு தொகுதியில் சந்திரசேகர ராவ் கட்சியின் வேட்பாளர் கங்கிடி சுனிதாவை ஆதரித்து அந்த கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்கள் தெருவில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தொழிலாளி ஒருவர் வீட்டின் முன்பு குளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் வாக்கு சேகரித்தவர்கள் அருகில் ஓடி சென்றனர். அவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டினர்.

பின்னர் உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.

இது தவிர புதுசு புதுசாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி பிரசாரத்தின் போது விஜயபேரியில் சாலையோர ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக மாறி தோசை சுட்டார்.

ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி தலைவர் ஒவைசி ஓட்டலில் தொண்டர்களுடன் அமர்ந்து இட்லி தோசை சாப்பிடுகிறார். மேலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

தெலுங்கானா அமைச்சரும் பி.ஆர்.எஸ். வேட்பாளருமான அஜய்குமார் என்பவர் பிரசாரத்தின் போது சவரவ தொழிலாளியாக மாறிவிடுகிறார்.

அவர் கட்டிங் சேவிங் செய்து வாக்கு சேகரித்தார். அவரிடம் பலர் முடி வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

மகபூப் நகர் பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் கவுட் வயலில் இறங்கி விவசாயிகளுடன் வேலை செய்தார். அவர் வேர்கடலை பறித்து கொடுத்து உதவினார்.

வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags:    

Similar News