இந்தியா
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியா வரவேற்பு
- காசா மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று இந்தியா நம்புகிறது.
- காசாவில் போர் நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை குறித்த ஒப்பந்தத்தின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
புதுடெல்லி:
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, இந்த ஒப்பந்தம் காசா மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று இந்தியா நம்புகிறது.
காசாவில் போர் நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை குறித்த ஒப்பந்தத்தின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கவும், போர் நிறுத்தம் செய்யவும், பேச்சுவார்த்தை பாதைக்குத் திரும்பவும் நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறோம் என்று தெரிவித்து உள்ளது.