இந்தியா

திருப்பதி கோவில் அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

Published On 2025-01-16 10:30 IST   |   Update On 2025-01-16 10:30:00 IST
  • போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
  • இந்த சம்பவம் திருப்பதி கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சின்ன சோவ் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று தங்களது 2 மகன்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர். கோவில் அருகே உள்ள பத்மநாப நிலைய கட்டிடத்தில் அவர்கள் தரிசனத்திற்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

அப்போது அவருடைய மகன்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். படிக்கட்டில் கிரில் இடைவெளி வழியாக அவர்களது 3 வயது மகன் தவறி கீழே விழுந்தான். அதில் பலத்த காயமடைந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பவம் திருப்பதி கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News