கடும் பனி மூட்டம்: ரெயில் சேவையில் பாதிப்பு - இந்திய ரெயில்வே அறிவிப்பு
- டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது.
- பனிமூட்டம் காரணமாக டெல்லி செல்லும் பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் போன்ற வடமாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.
வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக ரெயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக டெல்லி செல்லும் பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி பூர்வா எக்ஸ்பிரஸ், லக்னோ மெயில், பத்மாவத் எக்ஸ்பிரஸ், மேவார் எக்ஸ்பிரஸ், சிர்சா எக்ஸ்பிரஸ், ராஜ்தானி ஹவுரா எக்ஸ்பிரஸ், பிபிஎஸ் ராஜ்தானி, துரந்தோ எக்ஸ்பிரஸ், அயோத்தி எக்ஸ்பிரஸ், முசோரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 29 ரெயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லிக்கு மொத்தம் 29 ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.