இந்தியா
கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு - வாகனங்கள் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
- கேரளாவில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது.
- நிலச்சரிவு காரணமாக பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன.
கேரளா மாநிலத்தின் மூனாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அம்சபாவிதம் தவிர்க்கப்பட்டது.
முன்னதாக கடந்த 30 ஆம் தேதி கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு காரணமாக 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மீட்பு பணிகள் கூட முழுமை பெறாத நிலையில், மீண்டும் கேரளா மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.