இந்தியா

கங்கையில் நீராடினால் வறுமை ஒழிந்துவிடுமா?- கார்கே கேள்வி

Published On 2025-01-27 16:32 IST   |   Update On 2025-01-27 16:32:00 IST
  • கங்கையில் நீராடுவதால் வறுமை ஒழிந்து விடுமா?. உங்களுடைய வயிறு நிறையுமா?
  • நான் யாருடைய நம்பிக்கையையும் கேள்வி எழுப்ப விரும்பவில்லை.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மாவ் நகரில் ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் (Jai Bapu, Jai Bhim, Jai Samvidhan) பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார்.

பேரணியில் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது கூறியதாவது:-

நரேந்திர மோடியின் பொய் வாக்குறுதியில் சிக்காதீர்கள். கங்கையில் நீராடுவதால் வறுமை ஒழிந்து விடுமா?. உங்களுடைய வயிறு நிறையுமா? நான் யாருடைய நம்பிக்கையையும் (aastha) கேள்வி எழுப்ப விரும்பவில்லை. யாராவது தவறாக உணர்ந்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு குழந்தை பசியால் இறந்து கொண்டிருக்கும்போது, பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும்போது, தொழிலாளர்களுக்கு கடன் கிடைக்காதபோது நிலைியில் மக்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து (கங்கை) நீராட போட்டி போடுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு சொல்லவும்.

இப்படிப்பட்டவர்களால் நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. எங்கள் நம்பிக்கை கடவுள் மீதுதான். மக்கள் தினமும் வீட்டில் 'பூஜை' செய்கிறார்கள், பூஜை செய்த பிறகுதான் பெண்கள் வீட்டில் இருந்து வெளியில் செல்கிறார்கள். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் மதத்தின் பெயரால் ஏழைகள் சுரண்டப்படுவதுதான் எங்களுக்கு பிரச்சினை.

இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

கும்ப மேளா விழாவையொட்டி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். இன்று மதியம் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா புனித நீராடினார். ஏற்கனவே ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News