இந்தியா
மோட்டார் சைக்கிள் விபத்தில் தம்பதி பலி
- நந்தூர்கோணம் பகுதியில் அவர்கள் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
- மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பந்தலகோட்டையை சேர்ந்தவர் திலீப் (வயது 40). கென்யா நாட்டில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்க்கும் இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அவர் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
திருவனந்தபுரம் போத்தன்காடு அருகே உள்ள நந்தூர்கோணம் பகுதியில் அவர்கள் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட திலீப் மற்றும் நீது பரிதாபமாக இறந்தனர்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அமல் (22), சச்சு (22) ஆகியோர் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.