VIDEO: பைக்குடன் சாலையின் நடுவில் இருந்த குழியில் விழுந்த நபர்...
- வீடியோ காட்சி பார்ப்போரை பதற வைக்கிறது.
- சிறு காயங்களுடன் நபரை மீட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்கிறது. சாலையில் செல்லும் போது நாம் எவ்வளவு கவனமாக சென்றாலும் விபத்து நிகழ்வதாக பலரும் கூறுவதற்கு மோசமான சாலைகளே காரணம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை பணிக்காக, குடிநீர் பணிக்காக, வடிகால் வசதிக்காக என்று ஒவ்வொரு துறை சேர்ந்த பணிகளும் நடைபெறும் போது சாலை மோசமாகி விடுகிறது. இவ்வாறு ஒவ்வொரு துறை பணிக்காக சாலையின் நடுவே தோண்டப்படும் குழிகளும் உடனடியாக சீரமைப்பதும் கிடையாது. இதனால் குழியில் விழுந்து உயிரிழப்பதும் நிகழ்கிறது.
அதன்படி தான், குஜராத் மாநிலம் வதோதராவில் சாலையின் நடுவில் தோண்டப்பட்ட குழியில் நபர் ஒருவர் விழுவது தொடர்பான வீடியோ காட்சி பார்ப்போரை பதற வைக்கிறது.
சாலையின் நடுவே தோண்டப்பட்ட குழியின் அருகே இருசக்கர வாகனத்தில் வரும் வாலிபர் நிலைதடுமாறி குழியில் விழுந்து விடுகிறார். உடனே அங்கிருந்தவர்கள் அந்த நபரை மீட்கின்றனர். சிறு காயங்களுடன் நபரை மீட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.