இந்தியா

பாவத்தைக் கழுவ புனித நீராடிய 90,000 கைதிகள்.. மகா கும்பமேளா நீரை சிறைகளுக்கு கொண்டு வந்த உ.பி. அரசு

Published On 2025-02-22 16:14 IST   |   Update On 2025-02-22 16:52:00 IST
  • மாநிலம் முழுவதும் உள்ள 75 சிறைகளுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டது.
  • சுமார் 90,000 கைதிகளுக்கு புனித நீராட வசதி செய்து தரப்பட்டது.

உத்தரப் பிரதேச சிறை நிர்வாகம், மாநிலம் முழுவதும் உள்ள 75 சிறைகளுக்கு மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திலிருந்து புனித நீரைக் கொண்டு வந்து கைதிகளை குளிக்கச் செய்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட புனித நீர் சிறிய தொட்டிகளில் வழக்கமான தண்ணீருடன் கலக்கப்பட்டு கைதிகள் புனித நீராடி பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து  கைதிகள் அவற்றில் புனித நீராடினர்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச சிறை அமைச்சர் தாரா சிங் சவுகான் கூறியதாவது:

சங்கம் அமைந்துள்ள பிரயாக்ராஜ் புனித பூமியில், உத்தரப் பிரதேசம் வரலாற்றைப் படைத்துள்ளது. 55 கோடி மக்கள் புனித நீராடி ஆன்மீகப் பலன்களைப் பெற்றுள்ளனர்.

அதே பாதையைப் பின்பற்றி, உத்தரப் பிரதேச சிறை நிர்வாகம், அங்கிருந்து நேரடியாகக் கொண்டுவரப்பட்ட கங்கா ஜலத்தைப் பயன்படுத்தி சுமார் 90,000 கைதிகளுக்கு புனித நீராட வசதி செய்து நாட்டிலேயே முதன்மையாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News