இந்தியா
null
2025ல் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு OMR முறையிலேயே நடைபெறும் என அறிவிப்பு
- கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
- நீட் தேர்வு Pen-Paper முறையிலேயே நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து தேர்வு முறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதற்கிடையே என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவு தேர்வு முறையை அரசு மாற்றியமைத்தது. இதனால் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முறையில் மாற்றம் வருமா என்பதை அறிய மாணவர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இந்த நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு இந்தாண்டு வழக்கம்போல் OMR முறையிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் நடத்தப்பட வாய்ப்பு என கூறப்பட்ட நிலையில் Pen -Paper முறையிலேயே நடக்கும் என்றும் குறிப்பாக ஒரே நாளில் ஒரே ஷிஃப்ட்-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.