இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில அதிகாரங்களில் குறுக்கிடாது: சட்ட மந்திரி சொல்கிறார்

Published On 2024-12-17 11:38 GMT   |   Update On 2024-12-17 11:51 GMT
  • ஒரே நாடு தேர்தல் தொடர்பான மசோதா மக்களவையில் இன்று தாக்கல்.
  • பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதற்கு மத்திய மந்திரி சபை ஒப்பதல் வழங்கியது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம். அதற்கான மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கும். ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுக்கும். மாநிலங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு தெரிவித்தன.

இருந்தபோதிலும் மக்களவை ஒப்புதலுடன் இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா எந்த விதத்திலும் மாநில அரசின் உரிமைகளில் குறுக்கிடாது என மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று மதியம் பேசும்போது இது தொடர்பாக அர்ஜுன் ராம் மெக்வால் கூறியதாவது:-

தேர்தல் மறுசீரமைப்புக்காக சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த மசோதா தேர்தல் செயல்முறையை எளிதாக்கும் செயல்முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா வழியாக அரசியலமைப்புக்கு எந்த சேதமும் ஏற்படாது. அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பில் எந்த தலையீடும் இருக்காது. மாநில அதிகாரங்களில் நாங்கள் குறுக்கிடவில்லை.

இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News