இந்தியா
null

எலான் மஸ்க்கை சந்திக்கிறார் பிரதமர் மோடி

Published On 2023-06-20 06:29 GMT   |   Update On 2023-06-20 10:07 GMT
  • நியூயார்க்கில் பல்வேறு தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க இருக்கிறார்
  • இதற்கு முன் 2015-ல் எலான் மஸ்க்கை மோடி சந்தித்துள்ளார்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின்பேரில் இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டுள்ளார். நான்கு நாள் சுற்றுப் பயணத்தில் ஐ.நா. தலைமையகத்தில் உலக யோகா தினத்தில் கலந்து கொள்வது, அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவது போன்றவை உள்ளடங்கும்.

தற்போது முக்கியமான தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க்கை சந்திக்க இருப்பதாக உறுதிப்பட தகவல் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியபின், பிரதமர் மோடி எலான் மஸ்க்கை முதன்முறையாக சந்திக்க இருக்கிறார்.

இதற்கு முன் மோடி கடந்த 2015-ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா வாகன தொழிற்சாலையில் எலான் மஸ்க்கை சந்தித்துள்ளார். அப்போது எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கவில்லை.

மேலும், நியூயார்க் சென்றதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News