இந்தியா

டெல்லிக்கு குடிநீர் வழங்கும் யமுனையில் அதிக அளவில் அமோனியா: ஹரியானாவிடம் அறிக்கை கேட்கும் தேர்தல் ஆணையம்

Published On 2025-01-27 18:24 IST   |   Update On 2025-01-27 18:24:00 IST
  • டெல்லிக்கு குடிநீர் வழங்கும் யமுனை நீரில் விஷம் கலந்ததாக ஹரியானா அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.
  • மக்களின் குடிநீரை தடுப்பதை விட பெரிய பாவம் ஏதும் கிடையாது.

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பிரசாரதின்போது பாஜக-வை ஆம் ஆத்மியும், ஆம் ஆத்மியை பாஜகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு வழங்கப்படும் குடிநீரில் அளவுக்கு அதிகமாக அமோனியா இருப்பதாக ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் இருந்து டெல்லி வழியாக செல்லும் யமுனை நிதியில் இருந்துதான் டெல்லி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. யமுனை நதி நீரில்தால் அளவுக்கு அதிகமாக அமோனியா இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டுகிறது.

அமோனியாவின் அளவு அதிகமாக இருப்பதால் குடிநீர் வழங்கப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது என ஆம் ஆத்மி குற்றம்சாட்டிய நிலையில், நாளை மதியத்திற்குள் இது தொடர்பாக உண்மையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் ஹரியானா மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மாநில தேர்தலையொட்டி பாஜக தலைமையிலான அரியானா அரசு, வேண்டுமென்றே யமுனை நதி நீரை மாசுப்படுத்தியதாக டெல்லி மாநில முதல்வர் அதிஷி மற்றும் பகவத் மான் சிங் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

டெல்லி மக்களுக்கு குடிநீர் வழங்கும் யமுனை நீரில் அரியானா அரசு விசத்தை கலந்ததாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் "மக்களின் குடிநீரை தடுப்பதைவிட பெரிய பாவம் ஏதும் கிடையாது. பாஜக தனது மோசமான அரசியலுக்காக டெல்லி மக்களை தாகத்தில் ஆழ்த்த முயற்சிக்கிறது. ஹரியானாவிலிருந்து அனுப்பப்படும் தண்ணீரில் விஷத்தைக் கலக்கிறார்கள்.

இந்த மாசுபட்ட நீர் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது, அதை டெல்லியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களால் சுத்திகரிக்க முடியாது. பாஜக டெல்லி மக்களை பெருமளவில் கொல்ல விரும்புகிறது. இது நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

Tags:    

Similar News