இந்தியா

சுதந்திரத்திற்கு முந்தைய சூழ்நிலையை பாஜக, ஆர்.எஸ்.எஸ். விரும்புகின்றன: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2025-01-27 15:33 IST   |   Update On 2025-01-27 15:33:00 IST
  • 50 சதவீத இடஒதுக்கீடு என்ற தடுப்புச்சுவரை காங்கிரஸ் உடைக்கும். அதற்கான சட்டத்தை பாராளுமன்ற இரு அவைகளிலும் கொண்டு வருவோம்.
  • அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை மாற்றுவதற்கு பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். முயற்சி.

காங்கிரஸ் கட்சியின் "ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் (Jai Bapu, Jai Bhim, Jai Samvidhan) பேரணி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மாவ் நகரில நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கர் மற்றும் அவர் உருவாக்கிய அரசியலமைப்பை அவமதிக்கின்றன. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருந்து அதை பாதுகாக்க வேண்டும்.

மத்தியில் அதிகாரத்தை உறுதி செய்தபின், நாடு தழுவிய சாதிவாரி வாக்கெடுப்பை காங்கிரஸ் செயல்படுத்தும். பிரதமர் மோடி இதை ஒருபோதும் செய்யமாட்டார்.

50 சதவீத இடஒதுக்கீடு என்ற தடுப்புச்சுவரை காங்கிரஸ் உடைக்கும். அதற்கான சட்டத்தை பாராளுமன்ற இரு அவைகளிலும் கொண்டு வருவோம்.

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். சுதந்திரத்திற்கு முந்தைய சூழ்நிலையை விரும்புகிறார்கள். அங்கே ஏழைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. பணக்காரர்களுக்கு மட்டுமே உண்டு.

அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை மாற்றுவதற்கு பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்தன. இதனால்தான் 400 இலக்கு முழக்கத்தை பாராளுமன்ற தேர்தலின்போது முன் வைத்தனர்.

அரசியலமைப்பு மாற்றப்படும் நாள் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், பழங்குடியினருக்கென ஏதும் இருக்காது.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags:    

Similar News