போதைப் பொருள் கடத்தல் மையமாக குஜராத் மாறிவிட்டது: ராகுல் காந்தி
- பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டை பிளவுபடுத்துகின்றன.
- மோடி அரசால் இரண்டு பெரிய தொழிலதிபர்கள் மட்டுமே பலன் அடைகின்றனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி.ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
குஜராத் போதைப் பொருளின் கடத்தலின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து போதை பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன, ஆனால் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் நாட்டை பிளவுபடுத்துகின்றன. பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் தங்களின் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வு மக்களின் மனதை சூழ்ந்துள்ளது.
மோடி அரசின் கொள்கைகளால் இரண்டு பெரிய தொழிலதிபர்கள் மட்டுமே பலன் அடைகின்றனர். பாஜக அந்த இரண்டு பேருக்கும் எல்லா சலுகைகளையும் தருகிறது. எழுபது ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று மோடி கேட்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் இவ்வளவு விலைவாசி உயர்வு இல்லை என்று நான் சொல்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.