ஆந்திராவில் போலீஸ் தடையை மீறி சங்கராந்திக்கு முன்பு தொடங்கிய சேவல் சண்டை
- ஆந்திராவில் சேவல் சண்டைக்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது.
- சேவல் சண்டைகள் பங்கேற்பவர்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பந்தயம் கட்டுகின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையின் போது சேவல் சண்டை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திரா மாநிலம் அன்னமய்யா விஜயநகரம் கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், விசாகப்பட்டினம் வட ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் சேவல் சண்டை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
சண்டை சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி பந்தயம் நடத்துவதால் அதனை கண்டுகளிக்கும் பொதுமக்கள் மீது சேவல்கள் விழும் போது அதன் கால்களில் கட்டப்பட்டுள்ள கத்தியில் வெட்டுப்பட்டு பலர் உயிரிழந்து உள்ளனர். இதனால் ஆந்திராவில் சேவல் சண்டைக்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது.
போலீசாரின் தடையை மீறி சங்கராந்தி தொடங்குவதற்கு முன்பே தற்போது வட ஆந்திராவில் ஆங்காங்கே சேவல் சண்டை நடந்து வருகிறது. தொடங்கியுள்ள சேவல் சண்டை பிப்ரவரி மாத கடைசி வரை நடைபெறும்.
போலீசார் சேவல் சண்டை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் பந்தய நடத்துபவர்கள் புதிய இடங்களை தேர்வு செய்து சேவல் சண்டை நடத்தி வருகின்றனர். சேவல் சண்டைகள் பங்கேற்பவர்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பந்தயம் கட்டுகின்றனர். இதனால் சேவல் சண்டையில் பல கோடி ரூபாய் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.
அனகா பள்ளி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சேவல் சண்டை நடத்தி க்கொண்டு இருந்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சண்டை சேவல்களையும், ரூ.60 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.