இந்தியா

திருப்பதி கோவிலில் 5 கிலோ நகை அணிந்து தரிசனத்திற்கு வந்த பக்தர்

Published On 2025-01-01 04:32 GMT   |   Update On 2025-01-01 04:32 GMT
  • விஜயகுமார் தனது கழுத்தில் 5 கிலோ எடையுள்ள தங்க நகைகள் அணிந்து இருந்தார்.
  • சில பக்தர்கள் விஜயகுமாரை தங்களது செல்போன்களில் போட்டோ, வீடியோ எடுத்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் மாநில ஒலிம்பிக் சங்க இணைச் செயலாளராக உள்ளார். விஜயகுமார் நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்தார்.

அவர் தனது கழுத்தில் 5 கிலோ எடையுள்ள தங்க நகைகள் அணிந்து இருந்தார். அதிக அளவில் நகைகளை அணிந்து இருந்ததை ஏராளமானோர் வியப்புடன் பார்த்தனர். சில பக்தர்கள் விஜயகுமாரை தங்களது செல்போன்களில் போட்டோ, வீடியோ எடுத்தனர்.

இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், தங்கத்தின் மீதுள்ள ஆர்வத்தால் 5 கிலோ நகைகள் அணிந்து வந்ததாக தெரிவித்தார்.

Tags:    

Similar News