மணிப்பூரில் பரபரப்பு: எஸ்.பி. அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய கும்பல்
- மணிப்பூரில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
- மணிப்பூரில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் முதல் மந்திரி பைரேன் சிங்.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய குக்கி-மெய்தேய் இனக்குழுக்கள் இடையிலான கலவரத்தில் 250 பேர் பலியாகினர். இன்னும் அப்பகுதியில் கலவரம் ஓயவில்லை.
கடந்த அக்டோபர் முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பள்ளத்தாக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே, மணிப்பூரில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அம்மாநில முதல் மந்திரி பைரேன் சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தை நேற்று மாலை ஒரு கும்பல் தாக்கியது.
இந்த திடீர் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் எஸ்.பி. அலுவலகத்தை நோக்கி கற்களை வீசி எறிந்தனர். இதில் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த போலீசாரின் வாகனங்கள் சேதமடைந்தன.
இம்பால் கிழக்கு மாவட்ட எல்லையான சைபோல் கிராமத்தில் இருந்து பி.எஸ்.எப். மற்றும் சி.ஆர்.பி.எப். படையை அகற்றத் தவறியதாகக் கூறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.